சீனாவுடன் நட்புக்கு பாகிஸ்தானுக்கு உதவப்போகும் கழுதைகள்!

donkeys

சீனா - பாகிஸ்தான் நட்புறவை பலப்படுத்த கழுதைகள் பயன்படப் போகின்றன

  • Share this:
சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான உறவு அத்தனை சுமூகமாக இருக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளின் நிலைப்பாடு காரணமாக அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல ஆசிய கண்டத்தின் ஒரே சூப்பர் பவராக விளங்கத் துடிக்கும் சீனா, பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது.

இந்த சூழலில் சீனாவில் தேவை அதிகமாக இருக்கும் கழுதைகளின் தோலை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனாவுடனான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக கழுதைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

கழுதைகள் ஏற்றுமதிக்கு கைகொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் கழுதைகள் இனவிருத்திக்காக பிரம்மாண்ட பண்ணை ஒன்றை பஞ்சாப் அரசு ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாபில் பகதூர்நகர் பகுதியில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த கழுதை பண்ணை அமைந்துள்ளது. இது தவிர லாகூரில் கழுதை மருத்துவமனை ஒன்றும், மன்சேரா, டெரா இஸ்மாயில் கான் பகுதிகளில் இரண்டு சிறிய கழுதை பண்ணைகளையும் அமைத்துள்ளது பாகிஸ்தான் அரசு.

முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து கழுதை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Also Read: வகுப்பில் பாதி மாணவர்களுக்கு கொரோனாவை பரப்பிய ஆசிரியர்!

உலகிலேயே கழுதை இனவிருத்தியில் சீனா தான் முதலிடத்தில் இருந்தது. அங்கு கழுதை-மறை பசை மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இப்பொருளானது கழுதையின் தோலில் இருந்து எடுக்கப்படுகிறது. ரத்த ஓட்டம், ஆண்மை அபிவிருத்தி, ரத்த சோகை போன்ற நோய்களுக்கு இந்த மருந்துப் பொருள் பயன்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கூற்றை மருத்துவ ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த மருத்துவ பொருள் உற்பத்திக்காக சீனாவில் கழுதைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து நைகர் மற்றும் பர்கினோ பாசோ போன்ற நாடுகளில் இருந்து சீனா கழுதை தோலை இறக்குமதி செய்தது. அங்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் உதவியை சீனா நாடியிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read:   மனைவியின் அந்தரங்க உறுப்புக்கு ஊசி நூலால் தையல் போட்ட ‘சந்தேக பேர்வழி’ கணவர்!

சீனாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான கழுதை தோல்கள் தேவை இருப்பதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தானின் கழுதை எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் அளவுக்கு உயர்ந்து அவற்றின் மொத்த எண்ணிக்கை 5.6 மில்லியனாக அதிகரித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில் இந்தியாவில் கழுதைகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பது விலங்குகள் கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது. 2012ல் 3,30,000 ஆக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2019ல் 1.2 லட்சமாக குறைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது,
Published by:Arun
First published: