இந்தியாவுடனான உறவு குறித்தும் இரு நாடுகளின் இடையேயான மோதல் போக்கு குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் மிகக் குழப்பமான சூழல் நிலவிவரும் நிலையில், அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தூபாய் நாட்டு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அளித்த பேட்டியில் அவர், இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது என்றும் மாறாத ஒன்று தான். எனவே, நாம் சண்டை போட்டுக்கொண்டு நேரத்தையும் வளத்தையும் வீணடிக்காமல் அமைதியை உருவாக்கி வளர்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவுடன் பாகிஸ்தான் 3 முறை போரிட்டுள்ளது. இந்த 3 போர்களின் பலனாக துயரம், வறுமை மற்றும் வேலையின்மையை தான் பாகிஸ்தான் அனுபவித்துள்ளது. எனவே, இந்தியாவுடன் நாங்கள் அமைதியை தான் விரும்புகிறோம். எனவே, இந்திய தலைமைக்கும் பிரதமர் மோடிக்கும் நான் கூற விரும்பும் செய்தி இது தான், ஒன்றாக அமர்ந்து முக்கிய பிரச்சனைகளை பேசுவோம். காஷ்மீர் போன்ற விவகரங்களை மனம் திறந்து பேசி தீர்த்து இரு நாடுகளுக்கும் வளர்ச்சி கொண்டு வருவோம் என்று நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியையும்,உள்நாட்டு அரசியல் நெருக்கடியையும் தற்போது சந்தித்து வருகிறது.அங்கு தற்போது அடிப்படை உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உச்சம் தொட்டுள்ளது. அதேபோல், உள்நாட்டு பயங்கரவாத குழுக்களும், ஆப்கானின் தாலிபான் ஆட்சியாளர்களும் பாகிஸ்தானுக்கு கடும் சாவல்களை தருகின்றனர்.இத்தகைய சூழலில் தான் இந்தியா குறித்தான உறவு குறித்த பாகிஸ்தான் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India and Pakistan, Pakistan Army, PM Modi, War