சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்கான பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவதற்கு, அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிபுரிந்து வருவதாக குற்றஞ்சாட்டி, பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைத்துள்ளது. இதனால், சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக டெக்சாஸைச் சேர்ந்த ’லிண்டன் ஸ்ட்ராட்டஜீஸ்’ என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்துடன் பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நாட்டை வெளியே கொண்டு வரவும், கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருக்கவும் ட்ரம்ப் நிர்வாகத்தை இந்த நிறுவனம் தொடர்பு கொள்ளவிருக்கிறது. பாரிஸில் வரும் 21ம் தேதி தொடங்கும் பணிக் குழுவின் கூட்டத்தில், பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.