Home /News /international /

நடுவானில் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - நூலிழையில் உயிர்தப்பிய இம்ரான் கான்

நடுவானில் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - நூலிழையில் உயிர்தப்பிய இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தைத் தரையிறக்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaPakistanPakistanPakistan
    சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சென்ற விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விபத்துக்குள்ளாக இருந்த தருணத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினர்.

    சனிக்கிழமையன்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஆன இம்ரான்கான், சக்லாலா பகுதியிலிருந்து குஜ்ரன்வாலாக்கு பேரணிக்காக விமானத்தில் பயணம் செய்தார். அப்போது நடுவானில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக விமானம் பாதிவழியில் தரையிறங்கப்பட்டது.

    தொழில் நுட்பக்கோளாறு கண்டறியப்பட்ட உடனே விமானத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரக்கால தரையிறக்கம் நடவடிக்கை படி பாதுகாப்பாகத் தரையிறக்கினார். விமானம் புறப்பட்ட பிறகு கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    Also Read : செப்டம்பர் 19-ல் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு.. நாளை முதல் 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி - அரண்மனை அறிவிப்பு

    இந்த சம்பவத்தில் பிறகு முன்னாள் பிரதமர் இம்ரான்கான், குஜ்ரன்வாலாக்கு சாலை வழியாகப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கட்சியின் இன்சாஃப் மாணவர் கூட்டமைப்பு முன்னிலையில் பரப்புரையாற்றினார்.

    பாகிஸ்தான் பெண் நீதிபதியைப் பற்றிக் கூறிய கருதினால் தற்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மேல் நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் போடப்பட்டுள்ளது. மேலும் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஷாபாஸ் கில்லை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி, நாட்டின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மேல் வழக்குப் போடப்போவதாக இம்ரான்கான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Flight, Imran khan, Plane crash

    அடுத்த செய்தி