ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜோ பைடனின் கருத்தால் பாகிஸ்தான் அதிருப்தி.. அமெரிக்க தூதருக்கு சம்மன்!

ஜோ பைடனின் கருத்தால் பாகிஸ்தான் அதிருப்தி.. அமெரிக்க தூதருக்கு சம்மன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பாகிஸ்தான் நாட்டில் தான் அணு ஆயுதங்கள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் உள்ளது என ஜோ பைடன் கருத்து தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaIslamabadIslamabadIslamabad

  பாகிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

  அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்நாட்டின் வாஷிங்டன் நகரில் ஜனநாயக கட்சியின் விழா ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் சர்வதேச அரசியல் சூழல் குறித்து பேசினார். அதில், தனது எண்ணப்படி, உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் நாடுதான். அந்நாட்டில்தான் அணு ஆயுதங்கள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் உள்ளது என கருத்து தெரிவித்தார்.

  உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க அதிபர் கூறிய கருத்தானது, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்ததுடன் பாகிஸ்தானில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜோ பைடன் கருத்துக்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதருக்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், "ஜோ பைடன் ஏன் அப்படி கூறினார் என்று தெரியவில்லை. எங்களுக்கு இந்த கருத்து மிக வியப்பாக உள்ளது. சரியான புரிதல் இல்லாமல் தான் இவ்வாறு அவர் பேசியுள்ளார் என நினைக்கிறேன்.

  இதையும் படிங்க: தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் தொற்று.. இரு நகரங்களில் லாக்டவுன்!

  இது தொடர்பாக நான் பிரதமர் ஷெபாஸ் இடம் ஆலோசனை நடத்தினேன். அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம்" என்றார். அதேவேளை, இந்த நிகழ்வு இரு நாட்டு உறவை பாதிக்காது என அமைச்சர் பிலாவல் கூறியுள்ளார்.

  ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனன் போரில் தேவைப்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று பகீர் எச்சரிக்கைகளையும் அவ்வப்போது விடுத்து வருகிறார். இந்த சூழலில் உலக நாடுகள் மத்தியில் அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ள வேளையில் பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Joe biden, Nuclear, USA