ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒரு கிலோ சிக்கன் ரூ.700.. கோதுமை பாக்கெட் ரூ.3,100.. திவால் நெருக்கடியில் பாகிஸ்தான்..!

ஒரு கிலோ சிக்கன் ரூ.700.. கோதுமை பாக்கெட் ரூ.3,100.. திவால் நெருக்கடியில் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் உணவு நெருக்கடி

பாகிஸ்தான் உணவு நெருக்கடி

Pakistan Food Crisis | பாகிஸ்தான் அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 62 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiapakistan

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷியா போர் ஆரம்பமாகி மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. பாகிஸ்தானில் தற்போது அடிப்படை உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான தட்டுப்பாடுகளால் அங்கு விலைவாசி 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் 3100- ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை 155-ரூபாய்க்கும், ஒரு கிலோ கோழிக்கறி 700-ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 62 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவது, அந்நாட்டை திவால் நிலைக்கு கொண்டுச் செல்லும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அணு ஆயுத வல்லமை படைத்த நாடு, பொருளாதாரத்திற்கு மற்ற நாடுகளை கெஞ்சுவது வெட்க கேடானது என பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கவலை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Food, Pakistan News in Tamil