Home /News /international /

கனமழை பாதிப்பால் பாகிஸ்தானுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.. ஐநா தலைவர் நேரில் ஆய்வு

கனமழை பாதிப்பால் பாகிஸ்தானுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.. ஐநா தலைவர் நேரில் ஆய்வு

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு

பாகிஸ்தானில் கனமழை வெள்ள பாதிப்பால் சுமார் 18 பில்லியன் டாலர் அதாவது சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • int, IndiaIslamabadIslamabad
    பாகிஸ்தானில் இந்த வருடம் பருவமழையானது வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிந்த், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

    அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறிய தகவலின் படி, இந்த பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,325 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் 80 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள், 3,451 கிமீ சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 7 லட்சம் கால்நடைகள் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளன.

    இந்நிலையில் பாகிஸ்தான் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் கனமழை வெள்ள பாதிப்பால் சுமார் 18 பில்லியன் டாலர் அதாவது சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயிர் சேதம் காரணமாக அந்நாட்டில் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

    இதையும் படிங்க: ராணியை பார்க்க மனைவியின்றி தனியாக வந்த இளவரசர் ஹாரி

    அந்நாட்டின் வேலையின்மை 21.9 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் 37 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குவட்ரெஸ் அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். அத்துடன் அமைப்பின் துணை கொண்டு அங்கு நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.


    இந்நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவும் உதவ முன்வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 சட்டம் நீக்கிய பின் இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் முடக்கிக் கொண்டது. இந்நிலையில், தற்போதைய பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் தரப்பு 3 ஆண்டுகளுக்குப் பின் வர்த்தகத்தை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல், பாகிஸ்தான் தரப்பு கோரிக்கை வைத்தால் அந்நாட்டிற்கு உதவத் தயார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Economy, Flood, United Nation

    அடுத்த செய்தி