Home /News /international /

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான்..1000 பேர் பலி

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான்..1000 பேர் பலி

பாகிஸ்தான் மழை வெள்ளம்

பாகிஸ்தான் மழை வெள்ளம்

பாகிஸ்தான் நாட்டில் பருவமழை வெள்ள பாதிப்பால் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaIslamabadIslamabadIslamabad
    உலகின் பல்வேறு பகுதிகள் இயற்கை பேரிடர்களில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை கடும் வறட்சியையும் வெப்பத்தையும் சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்நாட்டில் பருவமழை வெள்ள பாதிப்பால் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    அந்நாட்டின் 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ள பாதிப்பானது சிந்த், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறிய தகவலின் படி, இந்த பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.


    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 119 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிந்த் மாகாணத்தில் 347 பேரும், அடுத்து பலுச்சிஸ்தானில் 238 பேரும் கைபர் மாகாணத்தில் 226 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.அந்நாட்டின் 8.09 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள், 3,451 கிமீ சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

    இதையும் படிங்க: நொய்டா இரட்டை கோபுரங்கள் போல் உலகளவில் தகர்க்கப்பட்ட புகழ்பெற்ற கட்டடங்கள் பற்றி தெரியுமா

    9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 7 லட்சம் கால்நடைகள் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளன.பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரிப் தனது பிரிட்டன் பயணத்தை ரத்து செய்து, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றார். மேலும், சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வெள்ள பாதிப்பானது நாட்டின் 15 சதவீத மக்கள்தொகை அதாவது 3.3 கோடி மக்கள் அவதிக்குள்ளாக்கியதாக பாகிஸ்தான் நாட்டின் காலநிலை துறைக்கான அமைச்சர் ஷேரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Flood, Flood alert, Flood warning

    அடுத்த செய்தி