ஹோம் /நியூஸ் /உலகம் /

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து..!

முஷாரஃப்

முஷாரஃப்

தேச துரோக வழக்கில் டிச. 17-ல் தண்டனை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

  முஷாரப் அதிபராக இருந்தபோது 2007-ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது 2013-ஆம் ஆண்டு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே 2016-ல் துபாய் சென்ற முஷாரப் பாகிஸ்தான் திரும்பவில்லை.

  கடந்த டிசம்பர் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பிற்கு தூக்கு தண்டனை அறிவித்தது. இதற்கு எதிரான மறுசீராய்வு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம், முஷாரப் மீதான வழக்கு அரசியலமைப்பிற்கு எதிரான என கூறி தண்டனையை ரத்து செய்தது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Pervez Musharraf