முகப்பு /செய்தி /உலகம் / பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹35 உயர்வு... பதறாதீங்க.. இது பாகிஸ்தான் நிலவரம்.!

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹35 உயர்வு... பதறாதீங்க.. இது பாகிஸ்தான் நிலவரம்.!

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வு

பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiapakistanpakistanpakistan

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 35 ரூபாய் அதிகரிப்படுவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.249. 80-க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.262.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 18 ரூபாய் அதிகரித்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும் எரிபொருளின் இருப்பை பொறுத்தே, தற்போது விலையை உயர்த்தி இருப்பதாக நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச செலாவணி நிதியத்தின் 9 ஆவது மதிப்பாய்வை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது. எனவே, அந்நாட்டின் பொருளாதார நிலையற்றத் தன்மை கடுமையான பண வீக்கத்திற்கு வித்திடும் என்று அஞ்சப்படுகிறது.

First published:

Tags: Fuel Price hike, Pakistan News in Tamil