முகப்பு /செய்தி /உலகம் / முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு.. பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பு

முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு.. பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பு

இம்ரான் கான்னுக்கு பிடிவாரண்ட்

இம்ரான் கான்னுக்கு பிடிவாரண்ட்

பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIslamabadIslamabad

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார். சர்வதேச சதி காரணமாக தனது ஆட்சி பறிபோனது. மக்களின் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என சூளுரைத்த இம்ரான் கான் தொடர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்.

அவ்வாறு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தங்களது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரையும், பெண் நீதிபதியையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது அரசு அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.. அதிபர் விளாதிமிர் புதின் அறிவிப்பு

இந்நிலையில், இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக அங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதி சவுத்ரி முன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் இம்ரான் கான். ஆனாலும், இம்ரான் கானின் அவதூறு பேச்சுக்கு பாகிஸ்தான் மாஜிஸ்ட்ரேட் கைது வாராண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால் அவரது வீட்டின் முன் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு அமளியில் ஈடுபடுவதை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

First published:

Tags: Imran khan, International