வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கும், ஆனால் அணு ஆயுதப்போரில்.... இம்ரான் கான் எச்சரிக்கை

போரினால் பிரச்னைகளை தீர்த்துவிட முடியாது என்பதால் போரை வெறுப்பவன் நான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கும், ஆனால் அணு ஆயுதப்போரில்.... இம்ரான் கான் எச்சரிக்கை
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: September 16, 2019, 7:21 AM IST
  • Share this:
இந்தியாவுடன் அணு ஆயுதப் போருக்கு வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு விவகாரம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும், சர்வதேச அமைப்புகளில் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் அல்-ஜசீராவுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். போரினால் பிரச்னைகளை தீர்த்துவிட முடியாது என்பதால் போரை வெறுப்பவன் நான். அதனால்தான் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபையிலும், சர்வதேச அரங்கிலும் வலியுறுத்தி வருவகிறேன். அதேசமயம், போரை பாகிஸ்தான் தொடங்காது என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.


பீரங்கி, துப்பாக்கிகளோடு வழக்கமான போர் என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தான் தோற்றுபோகும். அணு ஆயுதங்களை கொண்ட இருநாடுகளும் போரிட்டால் அவை அணு ஆயுத போரில்தான் முடியும். இது இந்திய துணைக் கண்டத்தை தாண்டிச் செல்லும் என்றும் எச்சரித்தார். மேலும் போரில் தோல்வியடைந்தால் சரணடைய வேண்டும் அல்லது உயிர்துறக்கும் வரை சுதந்திரத்துக்காக போராட வேண்டும் என்றும், இதில் இறுதிவரை போராடும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் 2,050க்கும் அதிகமான முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தமது கவலையை தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் அத்துமீறலால் இந்தாண்டு மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்திய ராணுவம் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Also watch

Loading...

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...