• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • எந்த உயிரிழப்பும் இல்லை: இந்தியத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விளக்கம்!

எந்த உயிரிழப்பும் இல்லை: இந்தியத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விளக்கம்!

அஃசிப் காஃபூர்

அஃசிப் காஃபூர்

காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய விமானப்படையின் தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஃசிப் காஃபூர் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்பு படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தத் தாக்குதலில் ஜெய்இமுகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 300 பேர் வரை இறந்திருக்கலாம் என்று இந்தியா ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன.

    இந்தநிலையில், இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஃசிப் காஃபூர், ‘பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் முசாபராபாத் பகுதி வழியாக இந்திய போர்விமானங்கள் நுழைந்துள்ளது. பாகிஸ்தானின் விமான வெளியில் நான்கு மைல்கள் வரைதான் இந்தியா விமானப்படை நுழைந்துள்ளது. இந்திய விமானப்படைக்கு பாகிஸ்தான் விமானப் படை உடனே தக்க எதிர்வினை ஆற்றியது.

    பாகிஸ்தான் விமானப் படை உடனே எதிர்வினையாற்றியதால், அவசரமாக திறந்தவெளியில் இந்தியா விமானப் படை வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசியது. அதனால், எந்தக் கட்டுமானத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: