கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மத விவகாரங்களுக்கு எதிரான சட்டங்களை பாகிஸ்தான் அரசு அண்மையில் கடுமையாக்கியது. இஸ்லாம் மதம், இஸ்லாமியக் கடவுள்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிப்பவர்களை தூக்கிலிடும் வகையில் இந்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.
இதை தொடர்ந்து , மத நம்பிக்கைகளுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை 48 மணி நேரத்திற்குள் நீக்க விக்கிபீடியா உள்பட பல்வேறு இணைய நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தல் வழங்கியது. எனினும், பாகிஸ்தான் அறிவுறுத்தலை விக்கிபீடியா ஏற்க மறுத்ததால் விக்கிபீடியா தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்குவதாக அறிவித்தது.
இதன் மூலம் விக்கிப்பீடியா தளத்தை பாகிஸ்தானியர்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக சமூக ஊடக தளங்கள் மற்றும் இணையதளங்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2012 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசாங்கம் 700 க்கும் மேற்பட்ட யூடியூப் இணையதளங்களில் இருந்த இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படங்களை முடக்கியது.
கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கு எதிராக பாகிஸ்தான் அரசு செயல்படுவதாக தெரிவித்துள்ள விக்கிபீடியா தங்கள் மீதான தடையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan News in Tamil, Wikipedia