• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட சீன நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்.. நட்பில் விரிசல்?

டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட சீன நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்.. நட்பில் விரிசல்?

china - pakistan

china - pakistan

இரு நாடுகளின் நட்பில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
போலி ஆவணங்களை சமர்பித்து டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதால் சீன நிறுவனம் ஒன்றை பாகிஸ்தான் அரசு கருப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது.

பாகிஸ்தான் அரசின் பணிகளுக்கான டெண்டரில் போலி ஆவணங்கள் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதையடுத்து சீன நிறுவனம் ஒன்றை பாகிஸ்தானின் தேசிய பரிமாற்றம் மற்றும் டெஸ்பாட்ச் அமைப்பு (NTDC) கருப்பு பட்டியலில் சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரை அந்த அமைப்பு வெளியிடவில்லை.

NTDC-யின் பொது மேலாளர் சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், குறிப்பிட்ட சீன நிறுவனம், டெண்டர்களை எடுப்பதற்காக போலி ஆவணங்கள் சமர்த்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இனி NTDC-யின் எதிர்வரும் டெண்டர்களில் கலந்து கொள்வது தடை செய்யப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த தடை அடுத்த ஒரு மாதத்துக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது,

Also read: மது போதையில் பைப்பை பிடித்து ஏறிய கல்லூரி மாணவர்.. 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்!

பாகிஸ்தானும் சீனாவும் நட்பு நாடுகளாக அறியப்படுகின்றன. மேலும் பாகிஸ்தானில் நடைபெற்றும் வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் பவர் ஜெனரேஷன் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 13 சீன பொறியாளர்களின் உயிர்களுக்கு நஷ்ட ஈடாக 38 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக பாகிஸ்தான் தர வேண்டும் என சீனா கூறியிருக்கிறது.

Also read:   கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 15 பேர் பலி!

கடந்த ஏப்ரல் 14ம் தேதி, டாசு அணைத்திட்ட கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சீன பொறியாளர்கள் பயணித்த பேருந்து மீது வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கார் மோதி தாக்குதல் நடத்தியதில் 13 சீன பொறியாளர்கள், 2 அப்பாவி பொதுமக்கள், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் என 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் டாசு அணைத்திட்டத்தின் வளர்ச்சிப் பணிகளை சீன நிறுவனம் நிறுத்தியது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தராமல் வேலையை தொடங்க மாட்டோம் என அந்நிறுவனம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகளாக திகழ்ந்து வரும் நேரத்தில் திடீரென இருதரப்புக்குள்ளும் நடைபெற்றும் வரும் அடுத்தடுத்த நிகழ்வுகள், இரு நாடுகளின் நட்பில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: