பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழக வளாகங்களில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் ரூ. 5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளனர். தலிபான்கள் ஆக்டிவாக இருக்கும் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டச் ஸ்கிரீன் மொபைல் அல்லது டேப்லெட்டுகள் பயன்படுத்த அனுமதியில்லை என்ற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
‘பல்கலைக்கழக நேரங்களின் போது மாணவர்கள் அதிகமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர், இது அவர்களின் கல்வி, நடத்தை மற்றும் செயல்திறனை பாதிக்கிறது. எனவே, பல்கலைக் கழக நேரங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது’ என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
10 ஆண்டுக்கு முன் எழுதிய கட்டுரைக்காக காஷ்மீர் மாணவர் கைது
இதனை மீறினால் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பல்கலைக்கழகங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
இறைவனை வழிபடுபவர்கள் வன்முறை செய்ய மாட்டார்கள் - நிதீஷ் குமார்
தலிபான்களின் ஆதிக்கம் உள்ளதாக கூறப்படும் கைபர் - பக்துன்க்வா மாகாணம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் முடி அலங்காரங்கள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகின்றன. மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவிகள் சல்வார் கமீஸ் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
உ.பி.யில் அனுமதியின்றி மத ஊர்வலம், ஒலிபெருக்கிகளுக்கு தடை - யோகி
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெஷாவர் பல்கலைக்கழகம், பெண்கள் தங்கள் விருப்பப்படி வெள்ளை சல்வாருடன் கமீஸ் அணிய வேண்டும் என்றும் ஆண்கள் கண்ணியமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதேபோன்று, கனமான மேக்கப், நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைப்பைகளை பயன்படுத்துவதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஆண்கள் சாதாரண கிழக்கு அல்லது மேற்கத்திய உடைகளை அணிந்து கொள்ளலாம். மாணவர்கள் வெட்டப்பட்ட, கிழிந்த அல்லது தோலில் பொருத்தப்பட்ட ஜீன்ஸ், ஷார்ட்ஸ், ஸ்லிப்பர்கள், காதணிகள் மற்றும் செயின்கள் போன்ற அணிகலன்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் ஹேர்ஸ்டைலை பொருத்தவரையில், எளிமையான, முறையான ஹேர் ஸ்டைலுடன், தாடியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.