ஹோம் /நியூஸ் /உலகம் /

அடிப்படைவாதிகள் எதிர்ப்பு - பாகிஸ்தானிலிருந்து ஆஸ்கருக்கு தேர்வான படத்துக்கு அந்நாட்டிலேயே தடை

அடிப்படைவாதிகள் எதிர்ப்பு - பாகிஸ்தானிலிருந்து ஆஸ்கருக்கு தேர்வான படத்துக்கு அந்நாட்டிலேயே தடை

ஜாய் லேண்ட்

ஜாய் லேண்ட்

பாகிஸ்தான் நாட்டிலிருந்து அதிகாரப் பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ஜாய் லேண்டு திரைப்படத்துக்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiapakistanpakistan

இந்தியாவிலிருந்து 1947-ம் ஆண்டு பிரிந்த பாகிஸ்தான் இஸ்லாமிய ஜனநாயக நாடாக இருந்துவருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சயின் சாதிக்கின் இயக்கிய முதல் படம் ஜாய் லேண்ட். பாகிஸ்தானின் ஆணாதிக்க குடும்பத்தில் சேர்ந்த இளைஞர்தான் படத்தின் கதாநாயகன். குடும்பத்தின் வம்சாவளி தொடர ஆண் குழந்தை அவசியம் என்ற கருத்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வீட்டின் கடைசிப் பையன் வீட்டுக்குத் தெரியாமல் கவர்ச்சி நடனப் பயிற்சி சேர்வார்.

அங்கு அவருக்கு திருநங்கை ஒருவருடன் காதல் ஏற்படும். இந்தக் கதைக் கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் வெளியாவதற்கு உலக அளவில் அந்தப் படம் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் சானியா சயீத், அலி ஜூனேஜோ, அலினா கான், சர்வாத் கிலானி, ரஷ்டி ஃபரூக், சல்மான் பீர்ஷாடா, சோஹாலி சமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தப் படம் அதிகாரப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்தப் படத்திற்கான மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்பட்டது.

இந்தப் படம் வரும் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்துக்கு சில மாதங்களுக்கு முன்பே அந்நாட்டின் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பட்டது. இந்தநிலையில், ஜாய் லேண்ட் படத்துக்கு எதிராக திடீரென கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. பிற்போக்கு எண்ணம் கொண்ட அமைப்புகள் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தன.

இதையும் படிங்க : கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு தேர்வான முதல் இந்திய பெண்!

இந்தநிலையில், படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நம் சமூகத்தின் ஒழுக்க விதிகளையும், சமூக மதிப்புகளையும் கணக்கில் கொள்ளாமல் அதிதீவிரமாக ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகளை இந்தப் படம் கொண்டுள்ளதாக எழுத்துப் பூர்வமான புகார்கள் வந்துள்ளன. திரைப்படச் சட்டம் 1979-யின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை மீறும் வகையில் இந்தப் படத்தில் காட்சிகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து படம் தடை செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். கேனஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் பாகிஸ்தானி திரைப்படம் ஜாய் லேண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Archana R
First published:

Tags: Pakistan cinema