முகப்பு /செய்தி /உலகம் / ஹபிஸ் சயித் தலைமையிலான அமைப்புகளுக்குத் தடை விதித்த பாகிஸ்தான்!

ஹபிஸ் சயித் தலைமையிலான அமைப்புகளுக்குத் தடை விதித்த பாகிஸ்தான்!

ஹபிஸ் சயித்

ஹபிஸ் சயித்

இந்திய அரசு அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் மசூத் அசாரின் சகோதரர் மற்றும் மகன் உள்பட 44 பேரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

  • Last Updated :

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஹபிஸ் சயித் தலைமையிலான ஜமாத்-உத்-தவா மற்றும் ஃபல்லா-இ-இன்சேனியட் அறக்கட்டையை தடை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. அதனால், பாகிஸ்தான் உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.

மசூத் அசாரைக் கைது செய்யவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் மசூத் அசாரின் சகோதரர் மற்றும் மகன் உள்பட 44 பேரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்தநிலையில், தற்போது மும்பைத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயித் தலைமையில் செயல்படும் ஜமாத்-உத்-தவா மற்றும் ஃபல்லா-இ-இன்சேனியட் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளைத் தடை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அந்த இரண்டு அமைப்புகளும் கண்காணிப்பு பட்டியலிலிருந்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த இந்திய அதிகாரிகள், ‘இது கண் துடைப்பு நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Also see:

top videos

    First published:

    Tags: Pakistan Army