இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

news18
Updated: September 14, 2018, 9:43 AM IST
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்
இந்திய- பாகிஸ்தான் கொடி
news18
Updated: September 14, 2018, 9:43 AM IST
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், இதுதொடர்பாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இருநாடுகள் இடையிலான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்பதை தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா கூறுகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணலாம் என்று தீர்மானித்துள்ளது. அடுத்தகட்டமாக என்னனென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம். மேலும் இது தொடர்பான எங்களது நிலைபாட்டை அமெரிக்காவுக்கு தெரிவித்துவிட்டோம் என அவர் கூறினார்.

இந்தியா- அமெரிக்கா ஆகிய 2 நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தமது எல்லை பகுதிகளில் தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்