பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரலாக இருந்தவரின் மகன், தற்போதைய ராணுவ தளபதியின் பணி நீட்டிப்பு குறித்து கடிதம் அனுப்பி கேள்வி எழுப்பியதற்காக அவருக்கு, தேசதுரோக வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை தந்துள்ளது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்.
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக இருந்து வருபவர் கமர் ஜாவேத் பஜ்வா. பாகிஸ்தானில் மிகவும் செல்வாக்கான பதவியில் இருந்து வரும் தளபதி பஜ்வா, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷரீஃபால் கடந்த 2016, நவம்பர் 29 அன்று அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள், அதன்படி 2019 நவம்பர் 28 அன்று இவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் அவருக்கு 2022 நவம்பர் வரை மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் பிரதமர் இம்ரான் கான்.
ஆனால், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் அரசு வழங்கிய பஜ்வாவின் பதவிக்கால நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்தது. பஜ்வாவுக்கு 6 மாதம் மட்டுமே பணி நீட்டிப்பு வழங்க முடியும் எனவும், இடைப்பட்ட காலத்தில் சட்டத்திருத்தம் மேற்கொண்டு பஜ்வாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கிக் கொள்ளலாம் என யோசனை கூறியது. இதையடுத்து பாராளுமன்றத்தில் ராணுவ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட இம்ரான் கான் அரசு, பஜ்வாவுக்கு நவம்பர் 2022 வரை பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
Also read: ரஷ்யாவில் இன்று முதல் சம்பளத்துடன் அனைவருக்கும் விடுமுறை – ஏன் தெரியுமா?
இந்நிலையில் பஜ்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விஷேச வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் மேஜர் ஜெனரலின் மகன் ஒருவர் பஜ்வாவை பதவியில் இருந்து விலக கோரி அவருக்கே கடிதம் எழுதியிருக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ஸஃபர் மஹ்தி அஸ்காரியின் மகனான ஹசன் அஸ்கரி என்பவர் தான் பஜ்வாவுக்கு கடிதம் எழுதியவர். இதனிடையே, கடிதம் எழுதியதற்காக அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று பின்னர் அது ராணுவ நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
Also read: முகத்தை மூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய 9ம் வகுப்பு மாணவர்கள் – சொன்ன காரணத்தால் அதிர்ச்சி!
இந்நிலையில் விசாரணையின் முடிவில் தேசதுரோக வழக்கில் ராணுவ மேஜர் ஜெனரலின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டை அளித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பாகிஸ்க்தானில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan Army