ஹோம் /நியூஸ் /உலகம் /

''தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலம்.. பதிலடி கொடுப்போம்'' - எச்சரிக்கை கொடுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி!

''தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலம்.. பதிலடி கொடுப்போம்'' - எச்சரிக்கை கொடுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி!

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி

சமீபத்தில் கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு பகுதிகள் மீது இந்திய செயல்பாடுகள் குறித்த பொறுப்பற்ற அறிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir |

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக பதவியேற்ற ஜெனரல் சையத் அசிம் முனீர் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ரக்சிக்ரி செக்டருக்கு சனிக்கிழமையன்று விஜயம் செய்தார். அப்போது தங்கள் தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேரடியாகப் பாதுகாக்க ராணுவம் தயாராக இருப்பதாகக் கூறி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) திரும்பப் பெறுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை வலியுறுத்தும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் போது திவேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார் .

அதற்கு பதிலளித்த வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியின் சமீபத்திய அறிக்கையில் "இந்திய இராணுவத்தைப் பொருத்தவரை, இந்திய அரசாங்கம் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அது நிறைவேற்றும். நாங்கள் அதற்கு எப்போதும் தயாராக இருப்போம்.

இதையும் படிங்க:அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் கடிதம் - 33 மாத சிறை தண்டனை பெற்ற நபர்!

இரு நாடுகளின் நலன் கருதி போர்நிறுத்த புரிந்துணர்வு ஒருபோதும் உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ராணுவம் அமைதியாக உள்ளது. ஆனால் எந்த நேரத்திலும் அது உடைக்கப்படுகிறதோ, நாங்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்." என்று கூறியிருந்தார்.

நவம்பர் 24 அன்று, ஜனாதிபதி ஆரிஃப் அல்வி முனிரை ஜெனரல் பதவிக்கு உயர்த்தி, அவரை ராணுவத்தின் தலைமைத் தளபதியாக (COAS) நியமித்தார், இந்நிலையை பதவி ஏற்ற ஒரு வாரத்தில் பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள அதிகாரிகளை சந்தித்தார். அங்கு வீரர்களுடன் உரையாடி, சவாலான சூழ்நிலையில் தங்கள் கடமைகளைச் செய்யும் அவர்களின் உயர் மன உறுதி, தொழில்முறை திறன் மற்றும் போர் தயார்நிலையைப் பாராட்டினார்.

அப்போது இந்திய ராணுவ தளபதியின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக "சமீபத்தில் கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு பகுதிகள் மீது இந்திய செயல்பாடுகள் குறித்த பொறுப்பற்ற அறிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம். நான் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளன. எங்கள் தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பது மட்டுமல்லாமல், போர் என்று வந்தால் சண்டையை எதிரிகளிடம் கொள்ளவும். எப்போது தயாராக இருக்கிறோம்" என்று முனீர் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

First published:

Tags: Jammu and Kashmir, Pakistan Army