• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் - உலக வங்கி தகவல்

கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் - உலக வங்கி தகவல்

Imran Khan

Imran Khan

சீனாவிலும் வெளிநாட்டு கடன் சுமை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

  • Share this:
வெளிநாட்டு கடன் சுமை அதிகம் கொண்ட உலகின் டாப் 10 நாடுகளில் பாகிஸ்தான் இடம்பிடித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய வெளிநாட்டு கடன் சுமைகளை வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, மேலும் கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து கடன் சேவை இடைநீக்க முயற்சிக்கு (டிஎஸ்எஸ்ஐ) பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான சர்வதேச கடன் சுமை குறித்த புள்ளிவிவர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி அங்கோலா, வங்கதேசம், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் கடன் சுமை அதிகம் கொண்டுள்ள முதல் 10 நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடும் நிதிசுமையில் தத்தளிப்பதாகவும், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சமீப நாட்களில் தகவல்கள் வெளியான நிலையில் உலக வங்கியின் அறிக்கை அதனை மெய்ப்பிக்கும் விதமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: DC vs KKR | நீ அவுட் இல்லப்பா.. சோகமாக வெளியேறி சந்தோஷமா மீண்டும் களத்துக்கு வந்த ஹெட்மயர்!

பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.9 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. 2019ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் இது 5% குறைந்துள்ளது.

தெற்காசியாவை பொறுத்தவரையில் சீனாவிலும் வெளிநாட்டு கடன் சுமை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டில் 4.7 பில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் நிதிச்சுமை, 2020ம் ஆண்டில் 36.3 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read:  அக்ஸர் பட்டேல் நீக்கம்.. சென்னை வீரர் சேர்ப்பு.. உலக கோப்பை இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்த பிசிசிஐ!

முன்னதாக, வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி) வழங்க சர்வதேச நிதியம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: