Home /News /international /

ஆப்கான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழித் தாக்குதல் - பொது மக்கள் பலர் உயிரிழப்பு

ஆப்கான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழித் தாக்குதல் - பொது மக்கள் பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

    தெரிக்-இ-தாலிபான் அமைப்பை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கான் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டு ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனார் ஆகிய பிராந்தியங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பல பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோஸ்ட் பிராந்தியத்தில் நடத்திய தாக்குதலில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு சார்பில் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளை, இந்த தாக்குதல் தெரிக்-இ-தாலிபான் அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க - கடும் தட்டுப்பாடு: பெட்ரோல்-டீசல் வாங்க கட்டுப்பாடு

    ஆப்கானிஸ்தானின் பஷ்துன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தெரிக்-இ-தாலிபான் அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி நடவடிக்கையை தொடர்ந்து செய்கிறது.

    பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆப்கானின் தாலிபான் அரசு, பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    வட மேற்கு எல்லையில், தெரிக்-இ-தாலிபான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகவும், அதற்கு பதிலடி தரும் விதமாகவே பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற தாக்குதல் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என ஆப்கானின் தாலிபான் அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே சுமார் 2,700 கிமீ நீளத்திற்கான எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லை பகுதியில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயணிப்பது வழக்கம். பாகிஸ்தான் அரசின் இந்த திடீர் தாக்குதலுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பிராந்தியங்களை சேர்ந்த ஆப்கான் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி