பாகிஸ்தான் விமான படையில் முதன்முறையாக விமானியாக இந்து வீரர்...!
இந்து சமூகத்தை சேர்ந்த பலர் பாகிஸ்தானின் பொதுத்துறை, ராணுவம் மற்றும் மருத்துவத்துறையில் பணிபுரிய ஆர்வம்

ராகுல் தகவ்
- News18 Tamil
- Last Updated: May 7, 2020, 10:02 AM IST
பாகிஸ்தான் விமான படையில் முதன்முறையாக இந்து மதத்தை சேர்ந்த ராகுல் தகவ் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணம் தர்பர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல் தகவ். பாகிஸ்தான் விமானப்படையில் இந்து ஒருவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
பாகிஸ்தான் விமான படையில் இந்து இளைஞர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து செயலளார் ரவி தவானி தெரிவித்துள்ளார். மேலும் இந்து சமூகத்தை சேர்ந்த பலர் பாகிஸ்தானின் பொதுத்துறை, ராணுவம் மற்றும் மருத்துவத்துறையில் பணிபுரிய ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். இதற்குமுன் 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மகேஷ் குமார் மலானி பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் தேசிய சட்டமன்ற இடத்தை வென்ற முதல் இந்து வேட்பாளர் ஆவார். சிந்து மாகணத்தின் தார்பர்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலானி என்பது குறிப்பிடதக்கது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணம் தர்பர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல் தகவ். பாகிஸ்தான் விமானப்படையில் இந்து ஒருவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
பாகிஸ்தான் விமான படையில் இந்து இளைஞர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து செயலளார் ரவி தவானி தெரிவித்துள்ளார். மேலும் இந்து சமூகத்தை சேர்ந்த பலர் பாகிஸ்தானின் பொதுத்துறை, ராணுவம் மற்றும் மருத்துவத்துறையில் பணிபுரிய ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.