• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் மனக்கசப்பு - அம்பலப்படுத்திய ஆடியோ கிளிப்!

தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் மனக்கசப்பு - அம்பலப்படுத்திய ஆடியோ கிளிப்!

ISI Chief

ISI Chief

அந்த ஆடியோவில் சக தளபதிகளுடன் பேசும் தாலிபான் தளபதி ஒருவர், சர்வதேச அளவில் நமக்கென இருந்த பெயரை பாகிஸ்தான் கெடுத்து விட்டதாக கூறுகிறார்.

  • Share this:
    பாகிஸ்தான் தலையீட்டால் தங்களின் பெயர் கெட்டுப்போனதாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தேவையில்லாமல் பிரச்னைகளை உருவாக்கி வருவதாகவும் தாலிபான் தலைவர் ஒருவர் பேசும் ஆடியோ பேஸ்புக்கில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த ஆடியோ தாலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பை வெட்ட வெளிச்சப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவரான பயஸ் ஹமீது காபுல் சென்று அங்கு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களையும் சந்தேகங்களையும் எழுப்பிய நிலையில் தற்போது தங்களுக்கென இருந்த நற்பெயர் பாகிஸ்தானால் கெட்டுப்போயுள்ளதாக தாலிபான்களின் தளபதி ஒருவர் பேசிய ஆடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

    அந்த ஆடியோவில் சக தளபதிகளுடன் பேசும் தாலிபான் தளபதி ஒருவர், சர்வதேச அளவில் நமக்கென இருந்த பெயரை பாகிஸ்தான் கெடுத்து விட்டதாக கூறுகிறார். மேலும் அமைச்சரவையில் யார் யார் இடம்பெறவேண்டும் என்ற விவகாரத்தில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் தேவையில்லாமல் தலையிட்டு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்த தளபதி கூறினார். மேலும் அதிபர் மாளிகையில் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் தாலிபான் தளபதிகளுக்கும், ஐஎஸ்ஐ பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நடுவே நின்றதால் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் அந்த ஆடியோவில் பேசும் தளபதி குறிப்பிடுகிறார்.

    Also Read:   செக்ஸ் வீடியோ காட்டி 4ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த தலைமை ஆசிரியர்!

    இந்த ஆடியோ பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் தலையீட்டையும், தாலிபான்களிடம் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும், தற்போது இருதரப்புக்குமான மனக்கசப்பையும் அம்பலப்படுத்தி உள்ளது.

    ஆப்கனின் புதிய அமைச்சரவையை தஜிக், உஸ்பெக் மற்றும் ஹசாரா சிறுபான்மையினர் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைக்க தாலிபான்கள் விரும்புகின்றனர். முன்னாள் அரசியல்வாதிகளை அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடியும் என தாலிபான்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அனால் ஹக்கானி மற்றும் குவெட்டா ஷுரா தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது தாலிபான்களின் முயற்சியை ஹக்கானி மற்றும் யாக்கூப் ஆகியோரின் உதவியால் பாகிஸ்தான் மடைமாற்றி விட்டிருக்கிறது..

    Also Read: புயலைக் கிளப்பிய பாதிரியாரின் ‘லவ் ஜிகாத்’ பேச்சு!

    சிராஜுதீன் ஹக்கானியை உள்துறை அமைச்சராக்கியுள்ளனர். இவர் ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாத அமைப்பை நிறுவிய ஹக்கானியின் மகன் ஆவார். அமெரிக்க உளவுத்துறையான எஃப்பிஐ-யால் தேடப்படும் குற்றவாளியாக சுட்டிக்காட்டப்படுபவர், மேலும் அல் கொய்தா அமைப்புடன் நெருக்கத்தால் பல்வேறு பயங்கரவாத செயல்களை இவர் அரங்கேற்றியிருக்கிறார்.

    பாகிஸ்தானின் தலையீட்டை அம்பலப்படுத்திய இந்த ஆடியோ பின்னர் அந்தப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: