Home /News /international /

'திருடன் திருடன்' - சௌதி அரேபியாவில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம்

'திருடன் திருடன்' - சௌதி அரேபியாவில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம்

சௌதி இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

சௌதி இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

சௌதி அரேபியாவின் மதினா நகருக்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக அங்கு குழுமிருந்த சிலர் திருடன் திருடன் என கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக சௌதி அரேபியா சென்றுள்ளார். சௌதி அரேபியாவின் மதினா நகருக்கு அவர் சென்றுள்ள நிலையில், அங்கு அவருக்கு எதிராக ஒரு குழுவினர் திருடன் திருடன் என கோஷமிட்டு விமர்சித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனடியாக சுதாரித்துக் கொண்ட சௌதி அரேபிய காவல்துறை பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பிய நபர்களை கைது செய்துள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. பாகிஸ்தான் பிரதமரின் இந்த பயணத்தில் பல முன்னணி அமைச்சர்கள், தலைவர்கள் உடனிருந்தனர். பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் இந்த சம்பவத்தின் போது உடனிருந்தார். இது தொடர்பாக அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.அவர் கூறியதாவது, "இந்த புனித தலத்தில் அந்த நபரின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த தலத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பாகிஸ்தான் சமூகத்தை சிதைத்துவிட்டனர்" என்றார்.

    பாகிஸ்தானின் 23ஆவது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்றார். முன்னதாக, பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது. இதை எதிர்கொள்ளும் விதமாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து புதுத் தேர்தல் நடத்த இம்ரான் கான் திட்டமிட்டிருந்தார். ஆனால் இம்ரானின் இந்த முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், இம்ரான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனக் கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து அவர் பதவி விலகினார். மூன்று முன்னணி எதிர்க்கட்சிகளான பூட்டோ, ஷெரீப், சர்தாரி குடும்பங்கள் ஒன்றிணைந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்தன.

    இதையும் படிங்க: அந்த கோகோ கோலா கம்பெனி என்ன விலைப்பா? சொல்லுங்க பேசி முடிப்போம்.. எலான் மஸ்க் கிண்டல்

    அந்நிய சதித்திட்டத்தால் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் இம்ரான் கான் மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்பேன் என கூறிவருகிறார். இந்த சூழலில்தான் பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் சௌதி அரேபியா சென்றுள்ளார். அங்கு சௌதி இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கும் ஷெபாஸ், அவரிடம் பாகிஸ்தான் பொருளாதார நிலைமையை சமாளிக்க கூடுதலாக 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Pakistan News in Tamil, Saudi Arabia

    அடுத்த செய்தி