ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு... ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு... ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப்

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே சிறந்த தீர்வை தரும் என ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் உரையாற்றியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaIslamabadIslamabad

  ஐநா பொதுச்சபையில் 77ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் உரையாற்றினார். அப்போது இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

  பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் தனது உரையில் கூறியதாவது, "அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த 1947 முதல் 3 போர்களில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இரு நாடுகள் மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வை தரும். பிரச்சனைகளை தீர்க்க போர் என்பதை கையிலெடுக்கக் கூடாது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகள்தான் இரு நாட்டின் அமைதிக்கு எதிராக உள்ளது.

  பாகிஸ்தானுக்கு ஸ்திரமான பொருளாதாரம் தேவை. அதற்கு அண்டை நாடான இந்தியாவுடன் அமைதியான சூழல் தேவை. எனவே, தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை. இரு நாடுகளும் ராணுவத்திற்கு அதிக நிதிகளை செலவிடும் சூழலை மாற்றி, அந்த நிதியை உணவு, கல்வி, வேலை மற்றும் சுகாதாரத்திற்கு செலவிட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

  மேலும் அவர், "இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரு நாடுகளும் எப்போதும் அண்டை நாடுகளாக இருக்க போகிறோம். எனவே, அமைதியா அல்லது சண்டையா என்பதை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த பதற்றமான சூழல் இரு நாடுகளுக்கும் இடையே வறுமை, வேலையின்மை, கஷ்டங்களைத்தான் கொண்டுவந்து சேர்த்துள்ளது. எனவே, உறுதியான நிலைப்பாட்டுடன் இரு நாடுகளும் பிரச்சனைக்கு தீர்வு கண்டு நமது வளங்களை கல்வி, சுகாதாரம், இளைஞர்களுக்கு வேலை அளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்துவோம்" என்று பேசியுள்ளார்.

  இதையும் படிங்க: கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் உஷாராக இருங்கள்... வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

  ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு முற்றிலும் முடங்கியது. சமீபத்தில் பாகிஸ்தான் கடுமையான வெள்ள பாதிப்பில் சிக்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே அத்தியாவசிய பொருள்கள் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: India and Pakistan, Jammu and Kashmir, PM Modi