• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா இல்லை... சுகாதாரத் துறை அமைச்சர் ஜாபர் மிர்சா உறுதி!

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா இல்லை... சுகாதாரத் துறை அமைச்சர் ஜாபர் மிர்சா உறுதி!

இம்ரான் கான்

இம்ரான் கான்

இந்நிலையில், அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஜாபர் மிர்சா உறுதிபடுத்தியுள்ளார்.

  • Share this:
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    அண்மையில் அவரை சந்தித்த சமூக சேவகர் ஒருவரின் மகனுக்கு கொரோனா உறுதியான நிலையில், பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.



    மேலும், இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஜாபர் மிர்சா உறுதிபடுத்தியுள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், பிரதமருக்கு கொரோனா இல்லை என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: