முகப்பு /செய்தி /உலகம் / பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு ஏற்படும் - இம்ரான் கான்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு ஏற்படும் - இம்ரான் கான்

இம்ரான் கான் | மோடி

இம்ரான் கான் | மோடி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒருமித்த தீர்வு ஏற்படுமா என்ற அச்சம் நிலவுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியின் பாஜக வெற்றிபெற்றால், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்த சிறப்பான வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வியாழக்கிழமை தொடங்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றிபெற்றால், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடைபெறுவதற்கு சிறப்பான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால், காஷ்மீர் விவகாரத்தில் ஒருமித்த தீர்வு ஏற்படுமா என்ற அச்சம் நிலவுவதாகவும் அவர் கூறினார். பாஜக வெற்றிபெற்றால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்த முடியும் என்று இம்ரான் கான் கூறினார்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த நிலையில், தற்போது இந்து அமைப்புகளால் அச்சம் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து தீவிரவாத கட்டமைப்புகளையும் ஒழிக்க பாகிஸ்தான் தயாராக இருந்தததாகவும், இந்தத் திட்டத்துக்கு ராணுவத்தின் முழுஆதரவை அரசு பெற்றிருந்ததாகவும் இம்ரான் கான் கூறினார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see...

Also see... குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த நெருக்கடி: டிடிவி 

top videos

    First published:

    Tags: BJP, Congress, India and Pakistan, Pakistan Army, PM Imran Khan