ஹோம் /நியூஸ் /உலகம் /

பரிசுப் பொருள்களை விற்பனை விவகாரம் : இம்ரான்கானுக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது பாக்., தேர்தல் ஆணையம்!

பரிசுப் பொருள்களை விற்பனை விவகாரம் : இம்ரான்கானுக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது பாக்., தேர்தல் ஆணையம்!

இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த தேர்தல் ஆணையம்

இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் நடவடிக்கையால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் இம்ரான்கான், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசியலமைப்பு சார்ந்த பதவி வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaIslamabadIslamabad

  பரிசுப் பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும்போது, பிரதமருக்கு வழங்கப்படும் விலை உயர்ந்த பரிசுகள், பாகிஸ்தான் சட்டப்படி, தோஷகானா என்று அழைக்கப்படும் அரசின் பரிசு பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படும். பிரதமருக்கு தேவையெனில் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் உள்ளிட்டவற்றை தள்ளுபடி விலையில் வாங்கிய இம்ரான்கான், அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

  இது குறித்து விசாரித்த பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையம், இம்ரான்கானை 5 ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் இம்ரான்கான், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசியலமைப்பு சார்ந்த பதவி வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது.

  இதையும் படிங்க: தொடரும் அதிர்ச்சி! - 99 குழந்தைகள் பலி.. இருமல் சிரப்புகளுக்கு தடை விதித்த இந்தோனேசியா!

  இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார். சர்வதேச சதி காரணமாக தனது ஆட்சி பறிபோனது. மக்களின் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என நாடு முழுவதும் பயணம் செய்து மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகள் அரசு பதவி வகிக்கவும்  தேர்தல் போட்டியிடவும்  இம்ரான் கானுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Imran khan