சம்பள உயர்வு கேட்கும் ஆசிரியர்கள் போராட்டத்துக்குக் கூட பாகிஸ்தானில் 144 தடை உத்தரவு

சம்பள உயர்வு கேட்கும் ஆசிரியர்கள் போராட்டத்துக்குக் கூட பாகிஸ்தானில் 144 தடை உத்தரவு

பாக். கொடி.

பாகிஸ்தான் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள குவெட்டா மாவட்டத்தில் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவதையடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

  • Share this:
    பாகிஸ்தான் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள குவெட்டா மாவட்டத்தில் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவதையடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அங்கு போராட்டத்துக்காக ஆசிரியர்கள் சங்கத்தினர் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, நீண்ட காலமாக சம்பள உயர்வைப் பற்றி பேசாமலேயே மாகாண அரசு இருந்ததால் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்துக்கு திட்டமிட்டு அறிவித்தனர்.

    சம்பள உயர்வை அந்த மாகாண அரசு தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் அமைதி வழி போராட்டம்தான் நடத்த திட்டமிட்டனர், இதற்கே அங்கு 144 தடை உத்தரவு என்ற கடுமையான அடக்குமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரொனா பாதிப்பும் தொற்று பீடித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இந்த தர்ணா போராட்டம் தடை செய்யப்பட்டுள்ளது, குவெட்டாவில் 5 பேருக்கு மேல் யாரும் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிறன்று குவெட்டா நகரில் நிறைய ஆசிரியர்கள் திரண்டனர். இதனால் பிராந்திய அரசு 144 தடை உத்தரவைக் கொண்டு வந்தது. கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் சம்பள உயர்வு கேட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அலுவலகப் பணிகளைப் புறக்கணிக்கவும், தேர்தல் பணிகளை புறக்கணிக்கவும் ஆசிரியர்கள் முடிவெடுத்தனர். ஆனால் வழக்கம் போல் எல்லா அரசுகளையும் போல் பலூசிஸ்தான் மாகாண அரசும் மவுனம் காத்து வருகிறது.

    இதனையடுத்து பெரிய அளவில் ஆசிரியர்களைத் திரட்ட அங்கு திட்டம் தீட்டப்பட்டது, இதனை முறியடிக்கவே 144 தடை உத்தரவு என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்துக்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    “இந்து சமூக மக்களுக்கு எனது ஹோலி திருநாள் வாழ்த்துக்கள், நிறங்களின் பண்டிகை” என்று ட்வீட் செய்துள்ளார்.

    அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். ஹோலி தற்போது இந்துக்கள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகி வருகிறது.
    Published by:Muthukumar
    First published: