ஹோம் /நியூஸ் /உலகம் /

விமான நிலைய பார்சலில் மனித மண்டை ஓடு.. ஸ்கேனில் வெளியான ஷாக்.!

விமான நிலைய பார்சலில் மனித மண்டை ஓடு.. ஸ்கேனில் வெளியான ஷாக்.!

மனித மண்டை ஓடு

மனித மண்டை ஓடு

மண்டை ஓடுகள் மெக்ஸிகோ நாட்டில் கொடூர நகரம் என்று அழைக்கப்படும் மைக்கோவாகன் என்ற மேற்குக் கடலோர மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மெக்சிகோ விமான நிலையத்தில்  அமெரிக்காவிற்கு செல்லும் கூரியர் பார்ஸல்களை எக்ஸ்-ரே  மூலம் ஸ்கேன்  செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பார்சலில் விநோதனமாக ஏதோ இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

மண்டை ஓடுகள் போல் இருந்துள்ளதால் சந்தேகப்பட்டு அந்த பார்ஸலை பிரித்துள்ளனர். கார்டுபோர்டு பெட்டிக்குள் நான்கு மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மத்திய மெக்சிகோவில் உள்ள குவெரேடாரோ  இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பார்சலில் மண்டை ஓடுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத் தாளில் சுற்றப்பட்டு இருந்துள்ளது.

இந்த மண்டை ஓடுகள் மெக்ஸிகோ நாட்டில் கொடூர நகரம் என்று அழைக்கப்படும் மைக்கோவாகன் என்ற மேற்குக் கடலோர மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இங்கு மனித வதைகளும், குற்றங்களும் அதிகம் நடக்கும் என்று போலீஸ் சார்பில் தெரிவித்தனர். ஆனால் கிடைத்த மண்டை ஓடுகளின் வயது, பாலினம், வயது போன்ற விபரங்களை காவல் துறை வெளியிடவில்லை.

மேலும் இது அமெரிக்காவின் தென் கரோலினாவின் மானிங்கில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட இருந்தது. இது மருத்துவ ஆய்வு, மாந்திரீகம், என்று எதற்காக அனுப்பப்பட இருந்தது என்ற காரணமும் சரியாக தெரியவில்லை.

மெக்ஸிகோவில் இருந்து பொதுவாக மனித எச்சங்களை அனுப்புவதற்கு தகுதிவாய்ந்த சுகாதார அதிகாரியிடமிருந்து சிறப்பு அனுமதி தேவை. ஆனால் கிடைத்துள்ள பார்சல் தரவுகளின் படி அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை. சட்ட விரோதமாக கடத்த முயன்றுள்ளது மட்டும் தெரியவந்துள்ளது.

First published:

Tags: America, Mexico, Skull Face