மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டதால், வன்முறை வெடித்தது. சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேன் (Ovidio Guzman) என்பவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் (El Chapo) எல் சாப்போவின் மகனான கஸ்மேன் கைது செய்யப்பட்டதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்தும், வாகனங்களுக்கு தீ வைத்தும், உள்ளூர் விமான நிலையங்களில் இருக்கும் விமானங்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 41 கோடி பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஓவிடியோ கஸ்மேன் அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாட்டில் பதற்றம் நிலவுகிறது.
War has broken out between Mexican Defense Forces and the Sinaloa Cartel in Culiacan in response to the arrest of El Chapo’s son.
More footage will be added in the thread below as it emerges. pic.twitter.com/d18O2Tbevu
— Libertarian Party Mises Caucus (@LPMisesCaucus) January 5, 2023
இந்த வன்முறையில் 29 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவரது தந்தையை போலவே இவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது. இவரது கைதிற்கு ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதற்கு முன்னரே 2019யில் இவரை காவல்துறையினர் கைது செய்ததும் அப்போதே வன்முறை அதிகமானதால் லோபஸ் ஒப்ரடோர் அரசு இவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drug addiction, Mexico, Security guards