2.5 லட்சம் ரோஹிங்யா அகதிகளுக்கு முதல் அடையாள அட்டை- ஐநா

கொடுமைகளின் துன்பங்களிலிருந்து மீளாத மக்கள் தங்களது தாய் நாடு திரும்பவே பயந்து வங்கதேச முகாம்களிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.

Web Desk | news18
Updated: May 18, 2019, 7:12 PM IST
2.5 லட்சம் ரோஹிங்யா அகதிகளுக்கு முதல் அடையாள அட்டை- ஐநா
(Photo: REUTERS)
Web Desk | news18
Updated: May 18, 2019, 7:12 PM IST
வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகள் 2.5 லட்சம் பேருக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக வசித்து வரும் ரோஹிங்யா அகதிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் மியான்மருக்கு திரும்பச் செல்லும் உரிமையை இந்த அடையாள அட்டை ரோஹிங்யா அகதிகளுக்கு வழங்கும். ரோஹிங்யா மக்களுக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஐநா அகதிகள் மையத்துடன் இணைந்து வங்கதேச அரசும் உதவியுள்ளது.


கடந்த 2017-ம் ஆண்டு ராணுவ கிளர்ச்சியால் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் தாக்குதல், பாலியல் வன்கொடுமை, இனப்படுகொலை எனப் பலவிதமான கொடுமைகளில் சிக்கிச் சிதைந்தனர். இதிலிருந்து தப்பி சுமார் 7 லட்சம் மக்கள் அகதிகளாக மியான்மர் நாட்டைவிட்டு வெளியேறினர். அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் வங்கதேச அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் உரிமைக்காக ஐநா முயற்சி எடுத்து ரோஹிங்யா மக்களுக்கான அடையாள அட்டையை அளித்துள்ளது. ரோஹிங்யா மக்களைப் பாதுகாப்புடன் மியான்மருக்கு திரும்பி அனுப்ப ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொடுமைகளின் துன்பங்களிலிருந்து மீளாத மக்கள் தங்களது தாய் நாடு திரும்பவே பயந்து வங்கதேச முகாம்களிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு..!
First published: May 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...