கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தெரிவித்துள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 14 சதவிகிதம் அதிகமாகும்.
கேரளாவில் மட்டும் 30 ஆயிரத்து 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 16 சதவிகிதமாக குறைந்திருந்த சோதனை நேர்மறை விகிதம் மீண்டும் 17 புள்ளி ஆறு மூன்று சதவீதமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஏற்கெனவே மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக மும்பை மாநகர ஆணையர் கிஷோரி பட்நாகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 567 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 3 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 618 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி 338 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 749 ஆக உயர்ந்ததுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3லட்சத்து 93 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 71 கோடியே,65 லட்சத்து 97 ஆயிரத்து 428 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also read: தாலிபான்களிடம் இருந்து தப்புவதற்காக முதியவர்களை மணக்க கட்டாயப்படுத்தப்படும் சிறுமிகள்!
உலக அளவில் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இஸ்ரேலில் 85 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு கட்டுக்கடங்காமல் தொற்று பரவி வருகிறது. இஸ்ரேலில் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என அரசு தெரிவித்துள்ளது.
குறைந்த செயல்திறன் கொண்ட பைசர் தடுப்பூசி மற்றும் டெல்டா வகை வைரஸ் தாக்குதலின் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது ஆகியவை தொற்று பரவல் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவவரை ஒரே நாளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 759 பேருக்கு தொற்று உறுதியானது. 2 ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக அளவில் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். 46 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Covid-19, Isreal