போரால் ஏமனில் சுமார் 5000 குழந்தைகள் உயிரிழப்பு? யுனிசெஃப் அறிக்கை

ஏமன் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3,60,000 குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள்.

போரால் ஏமனில் சுமார் 5000 குழந்தைகள் உயிரிழப்பு? யுனிசெஃப் அறிக்கை
ஏமன் போர்
  • News18
  • Last Updated: October 24, 2019, 4:19 PM IST
  • Share this:
ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராட்டக்காரர்களுக்கும் இடையேயான போரால் சுமார் 5,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறுகிறது யுனிசெஃப் அறிக்கை.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி போராட்டக்காரர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் போராட்டக்காரர்கள் நடத்திவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். ஏமன் அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு கொடுத்து வருகின்றன.

ஐநாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் நேற்று ஹவுத்தி குழந்தைகள் போரினால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராட்டக்காரர்களுக்கும் இடையேயான போரால் சுமார் 5,000 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்து அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறுகிறது. மேலும், 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிப் படிப்பை கைவிட்டு இருக்கலாம் என்று கூறுகிறது யுனிசெஃப் அறிக்கை.


யுனிசெஃப் முன்னதாக வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ஏமன் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3,60,000 குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். அந்நாட்டின் 80 சதவிகித மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்