ஹோம் /நியூஸ் /உலகம் /

தைவானுக்குள் நுழைந்த 30க்கும் மேற்பட்ட சீன ராணுவ விமானங்கள்.. 2வது நாளாக பதற்றம்!

தைவானுக்குள் நுழைந்த 30க்கும் மேற்பட்ட சீன ராணுவ விமானங்கள்.. 2வது நாளாக பதற்றம்!

china plane

china plane

அமெரிக்க பிரதிநிதி ஒருவர் தைவான் வந்திருக்கும் நேரத்தில் வழக்கமான பயிற்சி என்ற பெயரில், சீனா விமானங்களை பறக்க விட்டு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொள்வதாக தைவான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தைவான் வான் பரப்பில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட சீன ராணுவ விமானங்கள் நுழைந்துள்ளதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுகிறது. மேலும் சீனாவின் இத்தனை விமானங்கள் ஒரே நாளில் தைவான் நாட்டிற்குள் வருவதும் இதுதான் முதல் முறை என சொல்லப்படுகிறது.

சீனாவை ஒட்டி அமைந்துள்ள ஒரு தீவு தேசமானது தைவான். தனி நாடாக விளங்கினாலும், இதனை சீனா தங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியாக அறிவித்து அதன்படி நடத்தி வருகிறது. இதனிடையே தைவான் நாட்டிற்கு, பொருளாதார வளர்ச்சி, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் கெய்த் கிராச், கடந்த வியாழன்று மூன்று நாள் பயணமாக தைவான் வந்தடைந்துள்ளார். அவரின் வருகை சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, 28 சீன ராணுவ விமானங்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்றும் (சனிக்கிழமை) 39 சீன ராணுவ விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

அமெரிக்க பிரதிநிதி ஒருவர் தைவான் வந்திருக்கும் நேரத்தில் வழக்கமான பயிற்சி என்ற பெயரில், சீனா விமானங்களை பறக்க விட்டு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொள்வதாக தைவான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read:  உல்லாசக் கப்பலில் போதை பார்ட்டி.. நடந்தது என்ன?

இந்த விவகாரம் குறித்து தைவான் அதிபர் சு ட்செங் சாங் கூறுகையில், பிராந்திய அமைதியை சீர்குலைக்க சீனா எப்போதுமே மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை நடத்தியது, ”என்று அவர் தெற்கு தைவானில் ஒரு அறிவியல் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.

அதே நேரத்தில் தைவான் - அமெரிக்க உறவு குறித்து சீன ராணுவ அமைச்சக, கூறுகையில், தைவான் பிரிவினைவாதிகள் அளிக்கும் சவால்களை முறியடிக்க சீன ராணுவம் தகுந்த பலத்துடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

1949ம் ஆண்டு நடைபெற்ற போரில் தொடங்கி தற்போது வரை தைவான் - சீனா எல்லைப் பிரச்னை இருந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது,

First published:

Tags: China, Taiwan