ஆப்கானிஸ்தானில் 200 தாலிபான்கள் விமானப்படைத் தாக்குதலில் பலி

மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.

 • Share this:
  ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் சரிபாதி பகுதிகள் தாலிபன்கள் வசம் உள்ள நிலையில், நாட்டை முழுவதுமாக கைப்பற்ற தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தான் ராணுவம், தாலிபன்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல, ஆப்கானிஸ்தானின் ஹிராத் பகுதியில் இந்தியாவின் உதவியால் கட்டிக்கொடுக்கப்பட்ட அணையையும் தாக்க தாலிபான்கள் முயற்சிசெய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது. சீபெர்கான் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 200 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. தாலிபான்களின் வெடிபொருள்கள், ஆயுதங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: