Home /News /international /

போர் காரணமாக உக்ரைனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்: ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தகவல்

போர் காரணமாக உக்ரைனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்: ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தகவல்

கார்கிவ் நகரிலிருந்து போலந்தின் ரெஸ்ஸோவ் நகரை வந்தடைந்த உக்ரைன் மக்களுக்கு தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.

கார்கிவ் நகரிலிருந்து போலந்தின் ரெஸ்ஸோவ் நகரை வந்தடைந்த உக்ரைன் மக்களுக்கு தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.

கார்கிவ் நகரிலிருந்து போலந்தின் ரெஸ்ஸோவ் நகரை வந்தடைந்த உக்ரைன் மக்களுக்கு தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.

    போர் காரணமாக உக்ரைனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள இர்பின் மற்றும் சுமி நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள், அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற வழிதடங்களை அறிவித்துள்ளது. தாக்குதல்கள் தீவிரமடையும் என்பதால் ஏராளமான மக்கள் உக்ரைனைவிட்டு வெளியேறி வருகின்றனர். கடும் பனி பொழிவுக்கு இடையில், வடக்கு ரோமேனிய நகரான சிரட்டுக்கு ஏராளமானோர் அகதிகளாக வந்தனர்.

    Also read... உக்ரைனின் சுமியில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணி ஒத்திவைப்பு

    கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இர்பினிலிருந்து குழந்தைகளையும், காயமடைந்தவர்களையும் சுமந்தபடி ஏராளமானோர் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். தங்களிடம் இழக்க ஒன்றுமில்லை என அவர்கள் வேதனையுன் தெரிவித்தனர்.

    உக்ரைனின் பக்முத் நகரிலிருந்து ஹங்கேரியின் ஜஹோனி நகருக்கு ஏராளமான பெண்களும் குழந்தைகளும் ரயில்கள் மூலம் வந்தடைந்தனர். சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், அகதிகளாக வெளியேறியது வேதனை அளிப்பதாக அவர்கள் கூறினர்.



    கார்கிவ் நகரிலிருந்து போலந்தின் ரெஸ்ஸோவ் நகரை வந்தடைந்த உக்ரைன் மக்களுக்கு தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர். போலாந்தில் உறவினர்கள் உள்ளவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மால்டோவா, எல்லை நகரமான பலன்காவிற்கு குழந்தைகளுடன் ஏராளமானோர் வந்தடைந்தனர். நகருக்குள் செல்ல பெண்களும் குழந்தைகளும் கடும் குளிரில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    போலந்தின் மெடிகா எல்லைக்கு வந்த அகதிகளுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வெப்ப போர்வைகள்.அளித்து வரவேற்றனர். கீவிலிருந்து, தப்பி வர இரண்டு நாள்கள் ஆனதாக அகதிகள் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 13 நாள்களில் 20 லட்சம் பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி