Home /News /international /

100-க்கும் மேற்பட்ட பிரிட்டன் திரையரங்குகளில் எலிசபெத் இறுதிச்சடங்கு திரையிடல்

100-க்கும் மேற்பட்ட பிரிட்டன் திரையரங்குகளில் எலிசபெத் இறுதிச்சடங்கு திரையிடல்

பிரிட்டன் திரையரங்குகளில் எலிசபத்  இறுதிச்சடங்கு திரையிடப்படும்

பிரிட்டன் திரையரங்குகளில் எலிசபத் இறுதிச்சடங்கு திரையிடப்படும்

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
பிரிட்டனின் மிக நீண்ட காலம் அரசராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் செப்டம்பர் 9 அன்று காலமானார்.

அவரது உடல் பிரிட்டனில் உள்ள  வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்  அஞ்சலி செலுத்துவதற்காக  வைக்கப்பட்டுள்ளது . திங்கட்கிழமை அதிகாலை வரை அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்  நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை திங்கட்கிழமை ராணியின் அரசு முறை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்த  இறுதிச் சடங்கு நிகழ்வை பிரிட்டன் முழுவதும் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் திங்கட்கிழமை திரையிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பூங்காக்கள், சதுரங்கள் மற்றும் கதீட்ரல்களில் சடங்கு நிகழ்வுக்களை காட்சிபடுத்த தற்காலிகத் திரைகள் அமைக்கப்படும் என்று அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

300 வைரங்கள் பதித்த நெக்லஸ் - ராணி எலிசபெத்-க்கு திருமண பரிசளித்த ஹைதராபாத் நிஜாம்

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலுமிருந்து ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச குடும்பங்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

ராணியின் இறுதிச் சடங்கிற்காக அரசாங்கம் பொது விடுமுறையை பிரிட்டனில் அறிவித்துள்ளது. 1997 இல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கு, 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உட்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை விட, இறுதிச் சடங்கிற்கு அநேக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சினிமா திரையரங்குகளில், இறுதி சடங்கு திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என்று UK சினிமா சங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Funeral, Queen Elizabeth

அடுத்த செய்தி