இந்த கார் பானெட்டிற்குள் மறைந்திருந்த வனவிலங்கு எது தெரியுமா?

கார் பானெட்

வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு காரணமாக இந்த விலங்கு மிகவும் பயந்திருந்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
காருக்குள் நுழைந்த நீர்க் கீரி ஒன்று எதிர்பாராத விதமாக கார் என்ஜின் பெட்டியில் சிக்கிய ஒரு வினோத சம்பவம் ஸ்காட்லாந்தில் நிகழ்ந்துள்ளது. நீர்க் கீரி காருக்குள் நுழைந்திருப்பதை அறியாமல் வாகனத்தை எடுக்க முயன்ற பெண், திடீரென வினோத சத்தத்தை கேட்டு பயந்துள்ளார். இறுதியில் கார் பொன்னட்டுக்குள் ஒரு ஸ்காட்ஸ் நீர்க்கீரி சிக்கிக் கொண்டது தெரியவந்தது..

ஸ்காட்லாந்தை சேர்த்த பெண் தனது காரை எடின்பர்க்கில் உள்ள ஒரு குளத்தை சுற்றி அமைத்திருந்த நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். தனது பணிகளை முடித்தவுடன் காரைத் எடுக்க முயன்ற போது, திடீரென அவருக்கு வினோதமான சத்தம் கேட்டது. ஆனால் இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் காரின் என்ஜின் பெட்டியை முழுவதுமாக சரிபார்த்தார். இறுதியில் காரின் பொன்னட்டுக்குள் அமர்ந்திருந்த ஒரு ஸ்காட்ஸ் நீர்க்கீரியை கண்டுபிடித்தார்.

இதையடுத்து மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கியுள்ள விலங்குகளை மீட்கும் குழுவினருக்கு அந்தப் பெண் தகவல் தெரிவித்தார். வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு காரணமாக இந்த விலங்கு மிகவும் பயந்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த குளத்தை அடைய முயன்ற விலங்கு மனிதர்கள் நடமாட்டத்தால் அங்கிருந்த காருக்குள் பதுங்கிக் கொள்ள முயன்றுள்ளது.இந்த நிலையில் விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் ஸ்காட்டிஷ் சொசைட்டி (Scottish SPCA) நீர்க்கீரி மீட்கப்பட்ட புகைப்படங்களை தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது. இது விலங்கு பாதிக்கப்பட்ட நீர்க்கீரி என்று அதில் விவரிக்கப்பட்டிருந்தது. SPCA அளித்த தகவலின்படி, இந்த விலங்கு கார் பொன்னட்டை ஒரு மறைவான தங்குமிடமாக பயன்படுத்தியுள்ளது.

Also Read:   புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

SPCA அதிகாரிகள் டேரன் மற்றும் சாரா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நீர்க்கீரியை மீட்டனர். அவர்கள் காரைத் திறந்து பயந்துபோன விலங்கினை பாதுகாப்பாக மீட்க முடிந்தது. மீட்புக் குழு விலங்கைப் பொன்னட்டில் இருந்து மீட்ட பிறகு அதனை கையில் பற்றிக்கொள்ள முயன்றனர். ஆனால் அந்த விலங்கு மீட்பார்களிடம் இருந்து ஓடிவிட்டது. இதன் காரணமாக விலங்கிற்கு எந்தவிதமான மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை. இந்த முழு மீட்பு சம்பவத்தின் போது யாரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், புளோரிடாவின் தம்பாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் 10 அடி மற்றும் 2 அங்குல அளவு கொண்ட ஒரு பெரிய முதலை மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் விலங்கை மீட்டனர். அவர்கள் விலங்கை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள அலிகேட்டர் பண்ணைக்கு எடுத்துச் சென்றனர். வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு குளத்திலிருந்து விலங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதாக மீட்பார்கள் கூறியுள்ளனர்.
Published by:Arun
First published: