ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக தகவல்!

ஒசாமாவின் 15-வது பிள்ளையான ஹம்சா பின்லேடன், அல்-கய்தா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

news18
Updated: August 1, 2019, 9:13 AM IST
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக தகவல்!
ஹம்சா பின்லேடன் (AP)
news18
Updated: August 1, 2019, 9:13 AM IST
அல்-கய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் மகன், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்-கய்தா பயங்கராவாத இயக்கத்தை தோற்றுவித்து உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில், அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சில ஆண்டுகள் கழித்து ஒசாமாவின் 15-வது பிள்ளையான ஹம்சா பின்லேடன், அல்-கய்தா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவை மிரட்டி, ஹம்சா பேசிய வீடியோ காட்சிகள் வெளியானது.

கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சா பின்லேடனின் தலைக்கு அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர் விலையாக அறிவித்தது. இந்த நிலையில், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் என்.பி.சி மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஹம்சா எப்போது, எங்கே கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்க அரசும் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை.

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...