அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில், 3000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.
நியூயார்க் போஸ்ட்டுக்கு பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பில் லேடின் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரசிகை நான் எனத் தெரிவித்துள்ளார். ’டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
From Switzerland, #WWG1WGA #WWG1WGAWORLDWIDE #QAnon pic.twitter.com/pSuvaAig5v
— Noor Bin Ladin (@NoorBinLadin) May 17, 2020
’ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும் எனவும், பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்’ என கூறியிருக்கிறார் ஸ்விட்சர்லாந்தில் தற்போது வசித்து வரும் 33 வயதான லேடின்.
அதிபர் தேர்தலில் 2015-இல் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் டிரம்ப்பின் ஆதரவாளராக இருக்கிறேன். உறுதியான அவரது தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் அதிபராக வேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்துக்கும் அதுதான் நல்லது’ என்று தெரிவித்துள்ளார்.
ஒசாமா பில் லேடனின் சகோதரரான யெஸ்லாமுக்கும், ஸ்விட்சர்லாந்து எழுத்தாளர் கார்மெனுக்கு பிறந்த நூர் பில் லேடன், சவுதி அரேபியாவில் வாழ்ந்திருந்தால் தனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.