அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரும் ஒசாமா பின் லேடனின் முன்னாள் கூட்டாளியுமான டாக்டர் அமின் உல் ஹக் ஆப்கானில் உள்ள தன் சொந்த ஊரான நங்கர்ஹர் மாகாணத்துக்குத் திரும்பி வந்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011-ல் அமெரிக்காவினால் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோத்தாபாத்தில் கொல்லப்பட்டார். பின் லேடனுக்கு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்தான் இந்த அமின் உல் ஹக். தோராபோராவில் ஒசாமா பின் லேடனின் பாதுகாப்பு தலைவராக இருந்தார்.
1980ம் ஆண்டுகளில் பின் லேடனுக்கு நெருக்கமானவர் ஆனார்.
நங்கர்ஹர் மாகாணம் இப்போது தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் அங்கு ஆட்சியைப் பிடித்தவுடன் அல்கொய்தா பயங்கரவாதத் தலைவர் டாக்டர் அமின் உல் ஹக் மீண்டும் ஆப்கானுக்குத் திரும்பியிருப்பது பரபரப்பாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது, பயங்கரவாதிகள் உட்பட என்கிற தொனியில் அதன் வெளியுறவு அமைச்சராகப் போகும் ஸ்டானிக்சாய் இன்றுதான் தெரிவித்தார், ஆனால் அது இப்போது இவரது வருகையினால் பொய்த்துப் போயுள்ளது.
Also Read: தாலிபான்களை ஆதரிக்கவில்லை எனில் இன்னொரு 9/11 தாக்குதலை சந்திக்க நேரிடும்: எச்சரித்த பாகிஸ்தான் பிற்பாடு பல்டி
மேலும் அமின் உல் ஹக்கிற்கு பெரிய வரவேற்பும் அங்கு அளிக்கப்பட்டுள்ளது, ஆப்கான் தாலிபான்கள் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது, மீண்டும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிடுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அன்று காபூல் விமானநிலையத்தில் வெடிகுண்டுத் தாக்குதலில் நுற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருந்தது, அமெரிக்க படைகள், நேட்டோ படைகள் இருந்த போது இவர்கள் எங்கிருந்தனர் என்பது தெரியவில்லை, ஆனால் இப்போது தாலிபான்கள் ஆப்கானைப் பிடித்தவுடன் இந்த பயங்கரவாதச் சக்திகள் தலைதூக்கியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.