முஷாரப் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் வசித்து வரும் முஷரப் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார். இன்று காலை உடல் நிலை மோசமாக இருந்த நிலையில் அவர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், முஷாராப் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தினர் அளித்துள்ள விளக்கத்தில், "அவர் வென்டிலேட்டரில் இல்லை. மூன்று வார காலமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மிக மோசமான நிலையில் உள்ள அவர் மீண்டுவருவது இயலாத ஒன்று. அவரது உறுப்புகள் செயல்படவில்லை. எனவே, அவர் கஷ்டமில்லாது வாழ பிரார்த்தனை செய்யுங்கள்" என தெரிவித்துள்ளனர்.
Message from Family:
He is not on the ventilator. Has been hospitalized for the last 3 weeks due to a complication of his ailment (Amyloidosis). Going through a difficult stage where recovery is not possible and organs are malfunctioning. Pray for ease in his daily living. pic.twitter.com/xuFIdhFOnc
— Pervez Musharraf (@P_Musharraf) June 10, 2022
78 வயதான பர்வேஸ் முஷரப் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்தவர்.
பின்னர் 1999 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக ராணுவ கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய முஷரப், 2001ஆம் ஆண்டில் அந்நாட்டின் அதிபரானார். 2008ஆம் ஆண்டு வரை அதிபராக தொடர்ந்து பதவி வகித்த அவர் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக லண்டனுக்கு அடைக்கலம் புகுந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்ட முஷரப் துபாயில் விசித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan Army, Pervez Musharraf