கோமாளி வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி.. ட்விட்டரில் வலுக்கும் கண்டனங்கள்..

ஓரிகான் சுகாதார அதிகாரி

 • Share this:
  அமெரிக்காவின் ஓரிகான் மாகாண சுகாதார அதிகாரி, கோமாளி போல் வேடமணிந்து கொரோனா உயிரிழப்புகளை அறிவித்தது பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது.

  கொரோனா பாதிப்புள்ள நாடுகளில், தினமும் கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஓரிகான் மாகாண சுகாதார அதிகாரி வித்தியாசமான முறையில் கோமாளி போல் வேடமணிந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  ‘ஓரிகானில் மொத்தமாக 38,160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளது கவலையான விஷயம்’ என தெரிவித்துள்ளார். இதனை பேசி முடித்த பிறகு அவர் முகக்கவசத்தை எடுத்து மாட்டிக் கொள்கிறார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஹாலோவீன் திருவிழாவை எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


  ஆனால் இதுபோல் கொரோனா அறிவிப்பை வெளியிடுவதன் அவசியம் என்ன என்றும், இது மிகவும் மோசமான நடத்தை என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
  Published by:Gunavathy
  First published: