• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ’ஷேம்...ஷேம்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கோஷம்

’ஷேம்...ஷேம்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கோஷம்

இம்ரான் கான்

இம்ரான் கான்

12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ’ஷேம் ஷேம்’ என்று ஆவேசமாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணிக்கு நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

    12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு, தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 300 பேர் வரை இறந்திருக்கலாம் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன. இருப்பினும், இந்திய விமானப் படையின் தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.

    இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் முறையிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் ’ஷேம் ஷேம்’(shame, shame) என்று கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: