விவேக் மூர்த்தி, அருண் மஹூம்தார் - ஜோ பைடனின் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு..

விவேக் மூர்த்தி - அருண் மஜும்தார்

டாக்டர் விவேக்மூர்த்தி சுகாதாரத்துறை அமைச்சராகலாம் என்றும்  பேராசிரியர் மஜூம்தாரும் இடம்பெற வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

 • Share this:
  அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசார சமயத்தில் ஜோ பைடனுக்கு கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கிய டாக்டர் விவேக் மூர்த்தி, சுகாதாரம் மற்றும் மனிதவளத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  விவேக் மூர்த்தி


  மேலும் படிக்க.. உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?

  அமெரிக்காவில் கொரோனா டாஸ்க் போர்ஸ் என்ற பணிக் குழுவை ஜோ பைடன்அமைத்துள்ளார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த குழுவின் இணைத் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக்மூர்த்தி இடம் பெற்றுள்ளார்.

  கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி காலத்தில் சர்ஜன் ஜெனரலாக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.  இதேபோல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியரான அருண் மஜூம்தார், எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.  இவர் அதிபர் ஒபாமாவால் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர்.
  Published by:Vaijayanthi S
  First published: