ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது அங்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் சேவையில் தொழில் நடத்துவோர் பெரும் நிதி சிக்கலுக்கு ஆளாகி, தங்களுடைய சேவைகளை நிறுத்தி வருகின்றனர். 2 முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவைகள் உட்பட பல்வேறு ஆன்லைன் தொழில்கள் மூடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததிலிருந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதனால் நிதி நிலை பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பயன்பாட்டில் இருந்த முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவையான கிளிக்.எப் நிறுவனம் நிதி நெருக்கடியின் காரணத்தினால் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சுமார் 6 வருடங்கள் வணிகம் செய்த இவர்கள் தற்போது முடிவதாகச் சேவையை மூடும் நிலைக்கு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பாகால் என்ற ஆன்லைன் ஷாப்பிங் சேவை நிறுவனம் அதே காரணத்தினால் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டு நிறுவனமும் இந்த அறிவிப்பை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தலிபானின் புதிய கட்டுப்பாட்டால் மக்களின் வாங்கும் அளவு குறைத்துள்ளது, வங்கிகள் மக்களின் பணத்தைக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் டாக்ஸி செயலியான பூபர் என்ற நிறுவனமும் இந்துகோஷ் என்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் போன்றவையும் மூடப்பட்டுள்ளது. மேலும் பல ஆன்லைன் ஷாப்பிங் சேவைகள் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மகிழ்ச்சியில்லாத நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. மனித உரிமை மீறல், மனதளவில் துன்புறுத்துதல், வேலையின்மை, வறுமை போன்றவை தலிபான் மேல் வைக்கும் புகாராக இருப்பின் அதை முழுவதுமாக மறுக்கின்றனர் தலிபான் அரசு.
Also Read : இரண்டாம் எலிசபெத் ராணியின் ரகசிய கடிதம்... இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்கக் கூடாதாம்!
சமீபத்திய தகவலின் படி சுமார் 25 மில்லியன் மக்கள் ஆப்கானிஸ்தானில் வறுமையில் வாழுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுத்தல் போன்றவை தலிபான்கள் அரசுக்கு எதிராக வைக்கும் புகார்களாக இருக்கிறது.
கடந்த வருடம் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்கியதும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Online shopping, Taliban