கிழக்காசிய நாடான பிலிப்பைன்சில் பணவீக்கம் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இதன் காரணமாக அங்கு உணவுப் பொருள்களின் விலை கடும் உயர்வை கண்டுள்ளது.குறிப்பாக உணவுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் உயர்வை கண்டுள்ளது.
அந்நாட்டின் பணமான பேசோவின் மதிப்பின் படி, ஒரு கிலோ வெங்காயம் 650 பேசோக்களுக்கு விற்கப்படுகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.950 வருகிறது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சொல்லப் போனால் கோழி மற்றும் மாட்டிறைச்சி விலையை விட வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது.
இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டின் வேளாண்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி மாதத்திற்கு 17,000 டன் வெங்காயம் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தேவைப்படுகிறது. உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக 22,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினார்ட் மார்க்கோஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாதியாக குறையும் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை.. இலங்கை எடுத்த முக்கிய முடிவுக்கு காரணம் இதுதான்..!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததன் விளைவாக நடந்து வரும் போரின் தாக்கம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலக அளவிலான உணவு சங்கிலி விநியோகத்தில் போரின் தாக்கத்தால் பல விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வு கண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய சூழலுக்கும் உக்ரைன் போர் பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. அவசர கால வெங்காய இறக்குமதி மூலம் அடுத்த மாதம் அங்கு விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Onion, Onion Price, Philippines